வீட்டில் ரூ. 6 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்..ஒருவர் கைது!
Drugs worth 6 crore rupees seized at home.. One arrested
மும்பையில் உள்ள ஒரு வீட்டில் ரூ. 6 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகம், புதுவை மட்டுமல்லாது நாடு முழுவதும் போதைப் பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் சொல்கிறது. போலீசார் பல இடங்களில் சோதனைகளை தீவிரப்படுத்தி கடத்தல்காரர்களை கைது செய்து வருகின்றனர். சமீப காலமாக விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்றவைகளில் போலீசார் சோதனை நடத்தி போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் போதைப் பொருள் கடத்தல் கடந்த இரண்டு தினங்களாக அதிகரித்து உள்ளது.இந்தநிலையில் மும்பையில் உள்ள ஒரு வீட்டில் ரூ. 6 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பையின் கோவண்டி பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் சல்மான் என்பவரின் வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள பல்வேறு போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து சல்மான் ஷேக் என்ற 23 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சோதனையில் கஞ்சா, ரூ.18,000 மதிப்புள்ள 36 பாட்டில்கள் கோடீன் பாஸ்பேட் மற்றும் ரூ.1.30 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.6,03,88,000 மதிப்புள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷேக் போதைப்பொருட்களை எங்கிருந்து கொண்டுவந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.
English Summary
Drugs worth 6 crore rupees seized at home.. One arrested