மே 16, 17, 18 : சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள்!
chennai Special Bus week end
முகூர்த்தம், வார இறுதி விடுமுறை நாள்களையொட்டி, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு மே 16, 17, 18 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வரும் மே 16 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம் மே 17 (சனிக்கிழமை) மற்றும் மே 18 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு மே 16 (வெள்ளிக்கிழமை) அன்று 570 பேருந்துகளும், மே 17 (சனிக்கிழமை) 605 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு மே 16 வெள்ளிக் கிழமை அன்று 100 பேருந்துகளும், மே 17 சனிக்கிழமை அன்று 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து மே 16 அன்று 24 பேருந்துகளும்,மே 17 அன்று 100 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
English Summary
chennai Special Bus week end