கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு: பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிக்கை..!
Indias defence exports have increased 34 times in the last decade says Defence Minister
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரித்துள்ளதாக என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இதனால் பாதுகாப்பு உற்பத்தி சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் லாபமும் அதிகரித்துள்ளது.
நாட்டை தன்னிறைவு பெற செய்யும் நோக்கில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 'தன்னிறைவு இந்தியா ' மற்றும் ' மேக் இன் இந்தியா' திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்திய நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போடவும், முதலீடுகளை அதிகரிக்கவும், ஏற்றுமதி செய்யவும், இந்தியாவை சர்வதேச விநியோக சங்கிலியாக மாற்றவும், இறக்குமதிக்காக பிற நாடுகளை சார்ந்து இருக்கக் கூடாது என்பதற்காக, மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

மேலும், ஏராளமான பாதுகாப்பு ஹப்களை அமைத்ததுடன், பாதுகாப்பு மற்றும் வான்வெளி உற்பத்தியிலும் மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள், முக்கிய பாதுகாப்பு மற்றும் வான்வெளி தரவுகளை இந்தியாவுடன் பகிர்ந்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெடிமருந்துகள், ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியன 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதேவேளை, கடந்த 2029 -ஆம் ஆண்டிற்குள் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்துவது என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
இந்தியாவின் பாதுகாப்பு துறை முன் எப்போதும் இல்லாத வகையில் வளர்ந்து வருகிறது. இதற்கு 'தன்னிறைவு பெற்ற இந்தியா' திட்டம் ஊக்கமளித்து வருகிறது. 2013- 2014-ஆம் நிதியாண்டில் ரூ.686 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2024- 2025-ஆம் நிதியாண்டில் ரூ.23, 622 கோடியாக அதிகரித்துள்ளது. இது 34 மடங்கு அதிகம் ஆகும்.
2020-21- ரூ.8,345 கோடி
2021-22- ரூ.12,815 கோடி
2022-23- ரூ.15,920 கோடி
2023-24- ரூ.21,083 கோடி
2024-25- ரூ.23,622 கோடி
அளவில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி ஆகியுள்ளது.
English Summary
Indias defence exports have increased 34 times in the last decade says Defence Minister