விஜய் ஆண்டனியின் 'மார்கன்'; ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Vijay Antony Morgan film release date announced
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக உள் நுழைந்தவர் விஜய் ஆண்டனி. பின்னர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அதில், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
தற்போது 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இப்படத்திற்கு 'மார்கன்' என்று பெரியடப்பட்டுள்ளது.
கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, எதிர் வருகிற 27-ஆம் தேதி 'மார்கன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
English Summary
Vijay Antony Morgan film release date announced