பத்து மாத உண்டியல் பணத்தை ராணுவத்திற்கு அளித்த சிறுவன்.!! - Seithipunal
Seithipunal


கரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஸ்குமார் - பவித்ரா தம்பதியினர். இவர்களுடைய மகன் தன்விஷ். வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் பெற்றோர், உறவினர்கள் கொடுக்கும் பணத்தை, உண்டியலில் சேமித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், தன்விஷ் தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது எல்லையில் போராடி வந்த ராணுவ வீரர்களுக்கு உதவ, ராணுவத்துக்கு வழங்க முடிவு செய்தார்.

அதன் படி இந்த பணத்தை தன்விஷ் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் தன்விஷ் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, நாட்டுக்காக போரிட்ட ராணுவ வீரர்களின் நலனுக்கு பயன்படுத்தும் வகையில் நான் சேமித்த பணத்தை அளித்தேன். 

நம்மை பாதுகாப்பவர்களுக்கு உதவ விரும்பினேன்” என்று தெரிவித்துள்ளார். இவரது செயலை நாடு முழுவதிலுமிருந்து மக்கள் பாராட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

boy privide savings money to indian army in karoor


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->