தீபாவளிக்கு எதிராக சர்ச்சை கருத்து: ஷாகித் கபூரின் மனைவிக்கு சமூகவலைத்தளத்தில் வலுக்கும் கண்டனம்..! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு எதிராகக் நடிகர் ஷாகித் கபூரின் மனைவி மீரா ராஜ்புத் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டத்தில் அதிக பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், டெல்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை, மீரா ராஜ்புத், கடந்த 22-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டாசு வெடிப்பதற்கு எதிராக ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

அதில், 'பட்டாசு வெடிப்பதை சாதாரணமாக மாற்றுவதை ஏன் இன்னும் நிறுத்தவில்லை? குழந்தைகளுக்காகத்தான் செய்கிறோம் என்பதை ஏற்க முடியாது. நமது குழந்தைகள் சுவாசிக்கும் காற்றின் தரக் குறியீடு குறித்து நாம் கவலைப்பட வேண்டும். புவி தினத்தில் சுற்றுச்சூழலைப் பற்றிப் பேசிவிட்டு, தீபாவளியின் போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவது ஏன்?' என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், மீரா ராஜ்புத்தின் இந்தக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பல நெட்டிசன்கள் அவரது இரட்டை வேடத்தைச் சுட்டிக்காட்டி விமர்சித்து வருகின்றனர்.

ஏனெனில்,  நடிகர் ஷாகித் கபூரின் மனைவி மீரா ராஜ்புத் திருமணத்தின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.அதை சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், 'சொகுசுக் கார்களில் பயணம் செய்வது, குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துவது போன்றவை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதா?' என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shahid Kapoor wife faces heavy criticism on social media for controversial comments against Diwali


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?


செய்திகள்



Seithipunal
--> -->