பஞ்சாப் கள்ளச்சாராயம் விவகாரம் - உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்.!!
compensation to spurious liquor died peoples family in punjab
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கருதப்படுகிறது.
இதுவரைக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து போலீசார் வீடு வீடாகச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், " கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது சோகமான நிகழ்வாகும். அப்பாவி மக்களைக் கொன்ற இந்த கொலையாளிகள் எக்காரணம் கொண்டும் தப்பவிடப்பட மாட்டார்கள்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்" என்று அறிவித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 120 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. .
English Summary
compensation to spurious liquor died peoples family in punjab