அப்படியா! கல்லூரிக் கனவு 2025 திட்டத்தை தொடங்கி வைத்தார்...!!! - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Launched College Dream 2025 project Deputy Chief Minister Udhayanidhi Stalin
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் கல்லூரிக் கனவு 2025 திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,"பள்ளிக்கல்வியை முடித்தவர்களுக்கு அழகான எதிர்காலத்தை கொடுப்பதுதான கல்லூரி கனவு திட்டம்.கல்வி மட்டுமே வாழ்க்கையை மாற்றும் சக்தி என்பதை உணர்வு அனைவரும் நன்று பயில வேண்டும்.

யார் தெரிவிப்பதையும் அப்படியே நம்பாமல் பகுந்தாய்ந்து உணர வேண்டும் என்று பெரியார் தெரிவித்ததை கடைப்பிடிப்பவர்கள் இன்றைய மாணவர்கள்.கல்லூரிக் கனவுத்திட்டம் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம்.புதுமைப்பெண், தமிழ் புதல்வன் திட்டங்களால் மாணவ, மாணவிகள் பெருமளவில் பயன்பெறுகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதற்கு இணையத்தில் பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Launched College Dream 2025 project Deputy Chief Minister Udhayanidhi Stalin