தனி மாநில அந்தஸ்து வேண்டி 27-ஆம் தேதி டெல்லியில் போராட்டம்.. முதல்வர் ரங்கசாமியுடன் நேரு MLA ஆலோசனை!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரிக்கு  தனி மாநில அந்தஸ்துக்காக தொடர்ந்து போராடிவரும் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் இன்று மாண்புமிகு புதுச்சேரி முதல்வர்.N.ரங்கசாமி அவர்களே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வேண்டி தொடர்ந்து குரல் கொடுத்துவரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவர் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA  அவர்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பொது நல அமைப்பு  தலைவர்களின் பல கோரிக்கை மனுக்கள் பல கட்ட போராட்டங்கள் என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படியாக வருகின்ற ஜூன் மாதம்  27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நமது இந்திய தேசத்தின் தலைநகர் புது டெல்லியில் போராட்டத்தை முன்னெடுக்க அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும் மேதகு குடியரசு தலைவர் அவர்களுக்கும், மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கும், மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு இந்திய எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும் மற்றும் இந்திய தேசத்தின் உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு வழங்குவதற்காகபுதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கையெழுத்து இயக்கம் தொடங்கப் பட  உள்ளது.புதுச்சேரிக்கு  தனி மாநில அந்தஸ்துக்காக தொடர்ந்து போராடிவரும் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்மாண்புமிகு புதுச்சேரி முதல்வர் திரு.N.ரங்கசாமி அவர்களை  சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protest for separate state status on the 27th in Delhi Consultation with Chief Minister Rangasamy and MLA Nehru


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->