கேரளா பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது - சென்னையில் பரபரப்பு..!!
man arrested for harassment in chennai
வேலை முடிந்து வீடு திரும்பிய பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பெருங்குடியில் ஐ.டி. நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட்டு பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் அவரிடம் அத்துமீறி நடந்து உள்ளார்.

மேலும், இளம்பெண்ணின் வாயை மூடி இழுத்துச்சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் வாலிபரின் கையை கடித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து உள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த லோகேஸ்வரன் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for harassment in chennai