இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 48 பேர் உயிரிழப்பு! - Seithipunal
Seithipunal


வடக்கு காசாவில்  இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி  தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 48 பேர் உயிரிழந்ததாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தகவல் தெரிவித்துள்ளன. 

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட  இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்,பலரை  பணய கைதிகளாக  ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து, பல்வேறு நாடுகள் எடுத்த முயற்சியால் போர் நிறுத்தத்தை அறிவித்தது,அப்போது பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்தநிலையில் கடந்த ஒரு வாரகாலமாக இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பலர் பலியாகினர்.இதனிடையே நேற்று முன்தினம் ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் இருந்த பணய கைதியான இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் இடன் அலெக்சாண்டர் என்பவரை விடுதலை செய்தனர். ஆனாலும் இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், வடக்கு காசாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் வான்வழி  நடத்திய  தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 48 பேர் உயிரிழந்ததாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தகவல் தெரிவித்துள்ளன.மேலும்  காசாவில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில்  52,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

48 people including 22 children lost their lives in the airstrike conducted by Israel


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->