மேல் வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும்., அதனை தவிர்ப்பதற்கு எளிய இயற்கை வைத்தியம்.!!
upper stomach pain causes and solve naturally
நமது வயிற்றில் உள்ள மேல் வயிற்றில் வலி ஏற்படும் பட்சத்தில் உணவுக்குழாய் அல்லது இரைப்பையில் உள்ள பிரச்னையின் காரணமாக மேல் வயிறு வலிக்கலாம். இதுமட்டுமல்லாது மேலும் பல கரணங்கள் உள்ள நிலையில்., சில நேரத்தில் வரும் வயிற்று வலியானது தீவிர பிரச்சனையுடன் உள்ள அறிகுறிகளின் காரணமாக வயிற்று வலியானது ஏற்படும்.
பித்தப்பை மற்றும் கல்லீரல் ஏற்படும் பிரச்சனைகளின் காரணமாக மேல் வயிற்று வலியானது ஏற்படலாம். நமது பித்தப்பையில் கற்கள்., கல்லீரல் சுருக்கம் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற பிரச்சனைகளின் காரணமாக கூட வயிற்று மேல் வலியானது ஏற்படும். மேல் வயிற்றில் ஏற்படும் காயங்கள் மற்றும் தொற்றுகள் தாக்கத்தால் பெரும்பாலும் ஏற்படும்.
வயிறு வலியானது வயிற்று பகுதி மற்றும் உணவு குழாயில் இருந்து ஏற்படும் பட்சத்தில் நெஞ்சு எரிச்சல்., இரைப்பை குடல் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தம். இரைப்பை அலர்ஜி பிரச்சனையானது இரைப்பையின் சுவரில் இருக்கும் பாக்டீரியா தாக்கத்தால் ஏற்படும் பிரச்சனை ஆகும். இதன் காரணமாக இரைப்பை புண்., அலர்ஜி மற்றும் அல்சர் போன்றவை மூலமாக வயிற்று வலியானது ஏற்படும்.
தண்ணீர் அருந்துதல்:

நமக்கு மேல் வயிற்று வலியானது நிமோனியா அல்லது சிறுநீரகத்தின் மூலமாக ஏற்படும் தொற்றுகள் மூலமாக ஏற்படும் பட்சத்தில்., தினமும் அதிகளவு நீரை அருந்த வேண்டும். இதன் மூலமாக தேவையற்ற டாக்ஸின்கள் உடலில் இருந்து சிறுநீரின் மூலமாக வெளியேற்றப்பட்டு வயிற்று வலியானது சரி செய்யப்படும். தேவையான அளவு நீரை குடிக்கும் பட்சத்திலேயே செரிமானமானது சரியாக நடைபெறுகிறது. இதுமட்டுமல்லாது எலுமிச்சை சாறு., இளநீர்., பழச்சாறுகள் மற்றும் காய்கறி சாறுகளை குடித்து வந்தால் மேல் வயிற்று வலியில் இருந்து தப்பிக்க இயலும்.
சுடுநீரால் ஒத்தனம் வழங்குவது:

மேல் வயிற்று வலி இருக்கும் பட்சத்தில் சுடுநீரை கொண்டு வயிற்றின் மேல் புறத்தில் ஒத்தனம் கொடுத்தால் வயிறு வலியானது சற்று குறையும். இதன் மூலமாக வயிற்றின் தசைகள் நிதானமடைந்து வயிற்று வலியை குறைக்கும். வயிற்றில் ஒத்தனம் கொடுக்க முடியாத பட்சத்தில்., தினமும் இரண்டு வேலை சுடுநீரை கொண்டு குளித்து வர வேண்டும். இதன் மூலமாக வயிற்று வலியானது உடனடியாக நீங்கும்.
ஆப்பிள் சீடர் வினிகர்:

மேல் வயிற்றில் வலி இருக்கும் பட்சத்தில் செரிமானத்தை அதிகரிக்கும் வகையில் உள்ள ஆப்பிள் சீடர் வினிகரை 1 தே.கரண்டி அளவில் எடுத்து கொண்டு சூடான நீரில் சேர்த்து குடித்து வந்தால் மேல் வயிற்று வலியானது நீங்கும். இதனுடன் தேன் கலந்தும் சாப்பிடலாம்.. இதன் மூலமாக உடலின் இயக்கத்திற்கு போராடும் உறுப்புகளின் செயல்பாட்டிற்கு தேவையுள்ள pH-ன் அளவை பராமரித்து,, தொற்றுக்களை எதிர்த்து போராடி நமது உடலை பாதுகாக்கிறது.
விளக்கெண்ணெய் ஒத்தனம்:

மேல் வயிற்று வலியானது இருக்கும் பட்சத்தில் விளக்கெண்ணையை (2 தே.கரண்டி) ஒரு துணியில் ஊற்றிய பின்னர் சமமான தரையில் படுத்து., வயிற்றின் மீது வைத்து சூடான நீரை கொண்டு ஒத்தனம் வழங்கி வந்தால் மேல் வயிற்று வலியானது நீங்கும். இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை என்ற வீதத்தில் மூன்று மாதங்கள் செய்து வருவது நல்லது. இதன் மூலமாக நமது உடலின் செரிமான மண்டலத்தை மேம்படுத்தி., குடலியக்கத்தை சீராக்குகிறது.
குறிப்பு: இந்த முறையினை மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள்., குடல்வால் அலர்ஜி இருக்கும் நபர்கள் மேற்கொள்ள விரும்பும் பட்சத்தில் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது.
இஞ்சி:

மேல் வயிற்று வலியானது இருக்கும் பட்சத்தில் இஞ்சியை நீரில் போட்டு கொதிக்க வைத்து., அந்த நீருடன் தேன் கலந்து சாப்பிட்டால் மேல் வயிற்று வலியானது கட்டுக்குள் வரும். இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணத்தின் மூலமாக அலர்ஜி எதிர்ப்பு பண்புகள்., வயிற்று அலர்ஜி குறைந்து வயிற்று வலியானது நீங்குகிறது. நீரில் கொதிக்க வைத்து குடிக்க முடியாத பட்சத்தில்., சிறிதளவு இஞ்சி துண்டை எடுத்து கொண்டு வாயில் போட்டு ஒதுக்கி இருக்கலாம்.
மஞ்சள்:

மஞ்சளில் உள்ள மக்கத்துவங்கள் என்னென்ன என்று அனைவரும் அறிவோம். அந்த வகையில் மஞ்சள் தூளை ஒரு குவளை பாலில் ஒரு தே.கரண்டி வீதம் சேர்த்து கலக்கி குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் அமில தன்மை சீர்படுத்தப்பட்டு., செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இதன் மூலமாக வயிற்று வலியானது நம்மை விட்டு நீங்கும்.
அதிமதுரம்:

மேல் வயிற்று வலியானது இருக்கும் பட்சத்தில் அதிமதுரம் பொடியை ஒரு தே.கரண்டி நீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின்னர் நாளொன்றுக்கு அந்த நீரை மூன்று வேலை குடித்து வந்தால்., வயிற்று வலி பிரச்சனையானது உடனடியாக நீங்கும்.
சோம்பு:

மேல் வயிற்று வலியானது இருக்கும் பட்சத்தில் சோம்பை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து., பின்னர் அந்த நீருடன் தேன் கலந்து தினமும் மூன்று வேலை குடித்து வந்தால் இரைப்பையில் இருக்கும் குடல் வலி., சிறுநீர் அதிகளவில் வெளியேறி நமது உடல் நலமானது பாதுகாக்கப்படுகிறது. மேலும்., வாயு தொல்லை., வயிறு உப்புதல் மற்றும் அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கப்படுகிறது.
English Summary
upper stomach pain causes and solve naturally