மேற்குதொடர்ச்சி மலையில் அன்னிய நாட்டு மரங்களை அகற்ற அருமையான யோசனையை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய நாட்டு மரங்களை அகற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதியை பயன்படுத்தலாமா? என்பது குறித்து, நாளை விளக்கமளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வனப்பகுதி பாதுகாப்பு சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள வனப்பகுதியில் இருக்கக்கூடிய அன்னிய நாட்டு மரங்களை அகற்ற வேண்டும் என்றும், குறிப்பாக யூகலீப்டஸ் (தைல மரம்), ப்ரோசோபிஸ் ஜூலிபிலோர (சீமை கருவேலம்) மரங்களை அகற்ற வேண்டும் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள், ஊரக வேலை உறுதி திட்ட நிதியை இதற்கு பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினர். மேலும் இந்த நிதியை பயன்படுத்தலாமா என்பது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இருந்தனர்.

இதற்கு தமிழக அரசு தரப்பில், மத்திய அரசு நிதியை பயன்படுத்த கூடாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம்; அந்த நிதியை பயன்படுத்தும்போது அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும் எனவும் யோசனை வழங்கினார்.

மேலும், 100 நாள் வேலை திட்ட நிதியை பயன்படுத்தினால் என்ன? பயன்படுத்துவது குறித்து நாளைக்குள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Western Ghats Mahatma Gandhi NREGA ChennaiHC


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->