இதல்லாம் ஒரு மூஞ்சு..நீங்கள் ஹீரோ மெட்டிரியல் இல்ல.. பிரதீப்பிடம் செய்தியாளர் கேட்ட கேள்வி.. சரத்குமார் சரியான பதிலடி!
This is all a joke you are not hero material the reporter asked Pradeep a question Sarathkumar gave the right reply
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படம் “டியூட்”, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை, சுதா கொங்கரா இயக்கிய “சூரரைப் போற்று” திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். இசையை சாய் அபயங்கர் அமைத்துள்ளார்.
“டியூட்” திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், பிரதீப் ரங்கநாதனிடம் ஒரு செய்தியாளர் சற்று கூர்மையான கேள்வி எழுப்பினார் —
“நீங்கள் ஹீரோ மெட்டீரியலில் வருபவர் போல இல்லை, ஆனாலும் இன்று ஹீரோவாகியிருக்கிறீர்கள். இதற்கு காரணம் விடாமுயற்சியா அல்லது அதிர்ஷ்டமா?” என்று கேட்டார்.
இந்த கேள்விக்கு பிரதீப் பதில் சொல்ல தயாராக இருந்தபோது, அருகில் அமர்ந்திருந்த சரத்குமார் உடனே மைக்கை பிடித்து —
“இந்த துறையில் நான் 170 படங்களில் நடித்திருக்கிறேன். யார் ஹீரோ மெட்டீரியல், யார் அல்ல என்பதைக் தீர்மானிப்பது யாராலும் முடியாது. சமூகத்திற்கு நல்லது செய்யும் ஒவ்வொருவரும் ஹீரோவாகத்தான் இருக்கிறார்கள்!” — என்று அதிரடியாக பதிலடி கொடுத்தார்.அந்த பதில் கேட்டு அரங்கமே கைதட்டலால் முழங்கியது.
சரத்குமாரின் இந்த வார்த்தைகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளன. “டியூட்” திரைப்படம் தீபாவளிக்கே வெளியாகவுள்ளதால், ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
This is all a joke you are not hero material the reporter asked Pradeep a question Sarathkumar gave the right reply