டியூட் படவிழாவில் கையில் தாலியுடன் மமிதா பைஜுக்கு ப்ரோபோஸ் செய்த கூமாபட்டி தங்கபாண்டி.. பதறிய மமிதா பைஜு
Koomapatti Thangapandi proposed to Mamita Baiju with a thali in his hand at the Dude Film Festival Mamita Baiju was shocked
தீபாவளி பண்டிகை என்றாலே திரையரங்குகள் களைகட்டும். அதுபோல இந்த ஆண்டும் நவம்பர் 17ஆம் தேதி, மூன்று இளம் ஹீரோக்கள் தங்களது படங்களுடன் நேருக்கு நேர் மோதவுள்ளனர். பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’, துருவ் விக்ரமின் ‘பைசன்’, மற்றும் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ — இந்த மூன்று படங்களும் ஒரே நாளில் வெளியாவதால், தீபாவளி திரையுலகில் சூடு ஏறியுள்ளது.
கீர்த்திவாசன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள டியூட், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இதற்கு முன் பிரதீப் நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் படங்கள் இரண்டும் 100 கோடி ரூபாய் வசூலித்தன. இதனால், “டியூட்” மூன்றாவது 100 கோடி ஹிட் ஆகுமா என்ற ஆவல் திரைத்துறையில் நிலவுகிறது.
படத்தின் மற்றொரு சிறப்பு மமிதா பைஜுவின் வருகை. பிரேமலு படத்தில் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த மமிதா, இப்போது “டியூட்” மூலம் கோலிவுட் ரசிகர்களிடையே இன்னொரு மாயை கிளப்பப் போகிறார். ட்ரெய்லரில் அவரின் ஸ்கிரீன் பிரெஸன்ஸ் ஏற்கனவே பேசுபொருளாகி உள்ளது.
பட வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடந்த ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் மிகுந்த உற்சாகத்துடன் நடந்தது. பிரதீப் மேடையேறும்போது ரசிகர்களின் விசில்கள் ஒலித்தன; அதேபோல் மமிதா மேடையேறியபோதும் அதே அளவு ஆரவாரம் எழுந்தது.
இந்த நிகழ்ச்சியில் சமூக வலைதளத்தில் பிரபலமான கூமாபட்டி தங்கபாண்டியும் கலந்து கொண்டார். கேரளா ஸ்டைலில் உடை அணிந்து, கையில் தாலியுடன் வந்த அவர், மமிதாவிடம் “என் அம்மா உங்களுக்கு இந்த கிஃப்ட்டை கொடுக்கச் சொன்னார்” என கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இதற்கு மமிதா நகைச்சுவையாக, “நான் உங்களை அண்ணன் என்றே சொல்லிவிட்டேன். ரசிகர்கள் ஒத்துக்கொண்டால் தான் இந்த கிஃப்ட்டை வாங்குவேன்!” என சிரித்தபடி பதிலளித்தார். மேலும், கூமாபட்டி மலையாளத்தில் ‘ஐ லவ் யூ’ சொன்னபோதும், மமிதா அதை குளிர்ச்சியாக ஹேண்டில் செய்து அவருடன் சேர்ந்து டியூட் பாடலுக்கு நடனமாடினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Koomapatti Thangapandi proposed to Mamita Baiju with a thali in his hand at the Dude Film Festival Mamita Baiju was shocked