ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்..மடகாஸ்கரில் பதற்றம்!
The military has taken power Tension in Madagascar
அதிபர் நாட்டை விட்டு ஓட்டம் பிடித்ததை தொடர்ந்து மடகாஸ்கரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25-ந்தேதி தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் அதி பர் ஆண்ட்ரி ரஜோலினா அரசுக்கு எதிராக இளை ஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உள்பட பல் வேறு பிரச்சினைகளை முன்வைத்து போராட் டத்தை தீவிரப்படுத்தினர்.அப்போது பாதுகாப்பு படை யினருக்கும் போராட்டக்கா ரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இளைஞர் களின் போராட்டத்துக்கு ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்து அதிபர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இதனால் ராணுவம் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அதிபர் ஆண்ட்ரி ரஜோ லினா குற்றம்சாட்டி விட்டு அவர் நாட்டைவிட்டு பிரான்ஸ் ராணுவ விமானத்தின் மூலம் வெளி யேறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறும்போது, என் உயிரைப் பாதுகாக்க ஒரு பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற் பட்டது என்றார்.
அவர் தனது உரையில், அதிபர் பதவியை ராஜி னாமா செய்வதாக சொல்ல வில்லை. அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தப்பி ஓடிவிட்ட தாக எதிர்க்கட்சி தலைவர் சிடேனி ராண்ட்ரியானா சோலோனியாகோ அறி வித்துள்ளார்.அதிபர் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், மடகாஸ்கரில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட ராணுவ கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, விரைவில் மக்கள் அரசாங்கத்தை அமைக்க பிரதமர் நியமிக்கப்படுவார் என்றார்.
English Summary
The military has taken power Tension in Madagascar