முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக..பீகார் தேர்தல் மும்மூரம்!
BJP released the first list of candidates Bihar election is getting heated
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக 101 தொகுதிகளில் போட்டியிடுகிறது,இதில் 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் மாதம் முடிவடைகிறது. இதனால் அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6 மற்றும் 11-ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் 14-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறஉள்ளது .
மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில் முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் 121 தொகுதிகளில் 17-ந்தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.
இதனால் அங்குள்ள , அரசியல் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு வேகம் எடுத்துள்ளது என்று சொல்லலாம் . பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்று கடந்த 12-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவும், ஐக்கிய ஜனதாதளமும் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது . இதையடுத்து லோக் ஜனசக்தி கட்சிக்கு 29 இடங்கள் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகியவற்றுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கு 71 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. துணை முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, தாராப்பூர் தொகுதியிலும், மற்றொரு துணை முதல்-மந்திரி விஜயகுமார் சின்ஹா, லக்கிசாராய் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். மீதமுள்ள 30 வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
BJP released the first list of candidates Bihar election is getting heated