அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால், 'திராவிடப் புளுகு' இது தானோ? - பாஜக கேள்வி!
BJP Narayanan condemn to DMK Govt TRB Raja
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாரயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தாய்வான் நாட்டின் ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழகத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும், 14,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தொழில் துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா அவர்களும் தங்களுடைய 'X' தளத்தில் பெருமிதத்தோடு நேற்று (13/10/2025) பதிவிட்டதோடு, இது தான் திராவிடமாடல் என்று மார் தட்டிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இன்று அதே ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி ராபர்ட் வூ அவர்கள், முதலமைச்சர் மற்றும் குழுவினரிடம் சந்தித்து பேசியதாகவும், அந்த சந்திப்பில் தாங்கள் எந்த விதமான புதிய முதலீடுகள் குறித்து 'பேசக்கூட இல்லை' என்று அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
எதற்காக இப்படிப்பட்ட ஒரு தவறான பதிவை தொழில் துறை அமைச்சரும், முதலமைச்சரும் செய்தார்கள் என்று புரியவில்லை? மக்களை இப்படி திசை திருப்பி இல்லாத ஒன்றை இருப்பதாகவும், நடக்காத ஒன்றை நடந்ததாகவும் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் தொழில் துறை அமைச்சரே அதிகாரபூர்வமாக பதிவிட்டுள்ளது பெரும் கண்டனத்திற்குரியது என்பதோடு, தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவாகும். இதே போன்று தான் மற்ற முதலீடுகள் குறித்தும் தமிழக அரசு கூறி வருகிறதா? உண்மையில் நடப்பது என்ன என்று தமிழக மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால், 'திராவிடப் புளுகு' இது தானோ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan condemn to DMK Govt TRB Raja