தமிழக வெற்றிக்கழகம் கேள்விப்பட்டிருக்கோம்... அது என்ன தக்காளி வெற்றிக்கழகம்? - அரசுப் பேருந்தில் ஓடிய வாசகத்தால் பரபரப்பு! - MTC விளக்கம்
We have heard Tamil Nadu Victory Club What is it Tomato Victory Club slogan running government bus causes stir MTC explanation
சென்னை மாநகர அரசுப் பேருந்தின் மின்னணு இலக்குப் பலகையில் எதிர்பாராத விதமாக தோன்றிய "தக்காளி வெற்றிக் கழகம்" என்ற வாசகம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரங்களிலும், குறிப்பாக தவெக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்த படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் உடனடியாக விளக்கம் வெளியிட்டது.
அதில், சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் மின்னணு பெயர்ப் பலகையின் தகவல்களை அனுமதியின்றி மாற்றியிருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட பணிமனை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மின்னணு பெயர்ப் பலகை வழக்கமான நிலைக்கு மாற்றப்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் மின்னணு காட்சிப் பலகைகளின் செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், பாதுகாப்பு நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
We have heard Tamil Nadu Victory Club What is it Tomato Victory Club slogan running government bus causes stir MTC explanation