'ஆப்-ல பழக்கம்... காரில் கடத்தல்'...! - கோவை IT ஊழியரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய 'டேட்டிங் ஆப்' கும்பல்...! - 4 பேர் கைது - Seithipunal
Seithipunal


கோவையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளைஞரை காரில் கடத்திச் சென்று தாக்கி, தங்க நகைகள் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற சம்பவத்தில் 4 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பப் பொறியாளர் சஞ்சய்க்கு, 'கிரைண்டர்' செயலி வாயிலாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆத்விக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த அறிமுகத்தை பயன்படுத்திக் கொண்ட ஆத்விக், தனது கூட்டாளிகளுடன் இணைந்து சஞ்சய்யை காரில் ஏற்றிச் சென்று கடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.பின்னர், சிறுவாணி சாலை பகுதியில் அவரை தாக்கி மிரட்டி, ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் அவரிடமிருந்த பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், தனிப்படை காவலர்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு, கண்காணிப்பு காட்சிகள் மற்றும் கிடைத்த ஆதாரங்களை ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஆத்விக் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பறிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

App addiction kidnapping car Dating app gang who sketched and kidnapped Coimbatore IT employee 4 people arrested


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->