3 மாதங்களாகக் காணாமல் போன சிறுமி...! ஆந்திராவில் இரகசியமாக நடந்த கொடுமை...! - லாரி டிரைவரை தூக்கி உள்ளே வைத்த காவலர்...! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து ஆந்திர மாநிலத்துக்கு அழைத்துச் சென்று, பல மாதங்களாக உடன் தங்கியிருந்த லாரி ஓட்டுநரை காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா, வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (31) என்பவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.

அவருக்கும் காட்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இடையே ஏற்பட்ட அறிமுகம் நாளடைவில் நெருக்கமான தொடர்பாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்த பிரகாஷ், அவரை ஆந்திர மாநிலத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இருவரும் சுமார் மூன்று மாதங்களாக வெளிமாநிலத்தில் தங்கியிருந்ததால், சிறுமியின் இருப்பிடம் குறித்து குடும்பத்தினர் கடும் பதற்றமடைந்தனர்.மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்தச் சூழலில், இருவரும் ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவலர்கள் அங்கு விரைந்து சென்று சிறுமியை பாதுகாப்பாக மீட்டு, பிரகாஷையும் பிடித்து வேலூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்றது உறுதியானதுடன், பிரகாஷுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்றிருப்பதும், அவருக்கு ஐந்து குழந்தைகள் இருப்பதும் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, பிரகாஷை காவலர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மீட்கப்பட்ட 16 வயது சிறுமி, உரிய பாதுகாப்பு மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl who missing 3 months secret atrocity Andhra Pradesh policeman who lifted lorry driver and put him inside


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->