'விவசாயிகளுக்கு கிடைத்தது ஏமாற்றமே'..! பட்ஜெட் போர்வையில் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையா...? - பிரேமலதா சரமாரி குற்றச்சாட்டு...! - Seithipunal
Seithipunal


2026–27-ஆம் நிதியாண்டுக்கான தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் குறித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், விவசாயிகளின் அடிப்படை தேவைகளுக்கு தீர்வு அளிக்கும் அம்சங்கள் போதிய அளவில் இடம்பெறவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், வேளாண் வளர்ச்சிக்கான புதிய முயற்சிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், பட்ஜெட்டில் பெரும்பாலான அறிவிப்புகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டதுபோலவே இருப்பதாக விமர்சித்தார்.

மேலும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்காற்றும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் குறித்து எந்தவித புதிய அறிவிப்போ அல்லது நிதி ஒதுக்கீடோ இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் போதிய சேமிப்புக் கிடங்குகள் இல்லாததால் திறந்தவெளியில் குவித்து வைக்கப்படும் நிலை தொடர்கிறது என்றும், இதனால் மழை மற்றும் இயற்கைச் சூழலால் விளைபொருட்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், பயன்பாடின்றி கிடக்கும் தரிசு நிலங்களை மீண்டும் சாகுபடிக்கு ஏற்ற வளமான நிலங்களாக மாற்றுவதற்கான விரிவான செயல் திட்டங்களும், அதற்கான சிறப்பு அறிவிப்புகளும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் நீண்டகால எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து மீண்டும் அறிவித்திருப்பதையே இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை பிரதிபலிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farmers got disappointment Is it sticker job guise budget Premalatha barrage accusations


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->