பழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாய் உதவியுடன் சோதனை; கோவிலை சுற்றி கூடுதல் பாதுகாப்பு..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் காவல் கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு, இன்று (வியாழக்கிழமை) காலை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர்  பழநி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், மோப்ப நாய் உதவியுடன் 10-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள், பழநி மலைக்கோயில், தேவஸ்தான அலுவலகம் மற்றும் 2.4 கி.மீ., தூரமுள்ள கிரிவலப் பாதை, அங்குள்ள முடி காணிக்கை செலுத்துமிடம், இலவச கழிப்பறை, குளியலறை, பக்தர்கள் காத்திருக்கும் மண்டபத்தில் தீவிர சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மற்றும் கோயில் நிர்வாகம் நிம்மதி அடைந்தனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து, பழநி நகர் போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது பழனி கோயிலில் பாதுகாப்பு கூடுதலாக பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்க காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை போலீசார் ஆய்வு செய்ததில், தொலைபேசியில் பேசிய நபர் திண்டுக்கல் பகுதியில் இருப்பது கண்டறிந்தனர். மேலும், திண்டுக்கல் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், தொலைபேசியில் பேசிய நபர் தருமபுரியை சேர்ந்த முனியப்பன் (24) என்பதும், பழநி முருகன் கோயிலில் சுவாமியை அருகில் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்காத கோபத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bomb threat to Palani Murugan Temple


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->