நாடக காதலில் சிக்கிய புதுக்கோட்டை சிறுமி! பெங்களூரில் வைத்து சீரழித்த வேலூர் இஸ்லாமிய இளைஞர்கள்!
Viralimalai Girl Abuse in Bangalore
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், திருச்சி மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் ஊதுபத்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி பணிக்கு செல்வதாக பெற்றவரிடம் கூறிவிட்டு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து பெற்றோர்கள் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமி பெங்களூர் பகுதியில் இருப்பதாக தெரியவந்தது.

இதனை அடுத்து பெங்களூருக்கு விரைந்த போலீசார், ரயில் நிலையத்தில் வைத்து சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை வழியனுப்ப காத்திருந்த இரண்டு இளைஞர்களையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
வேலூரை சேர்ந்த 32 வயது முபாரக் அலி என்ற இளைஞன், சிறுமியிடம் செல்போன் மூலம் பழகி, காதலிப்பதாக ஏமாற்றி கடந்த ஒன்றாம் தேதி பெங்களூருக்கு அழைத்து வந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
தொடர்ந்து முபாரக் அலி தனது நண்பர்களான வேலூரை சேர்ந்த நியாஸ் (வயது 32), சதாம் உசேன் (வயது 28) ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளார். இவர்கள் இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிய வருகிறது.

பின்னர் சதாம் உசேன், நியாஸ் ஆகியோர் சிறுமியை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப பெங்களூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, போலீசார் பிடித்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து மூன்று இளைஞர்களையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
Viralimalai Girl Abuse in Bangalore