பொன்முடி வீட்டின் பீரோ, லாக்கரை போலி சாவி மூலம் திறக்கும் அமலாக்கத்துறை! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் சண்முகபுரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் காலையில் இருந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு வீட்டில் சோதனை நடந்து வருகிறது. 

அமைச்சர் பொன்முடியின் வீட்டின் அருகே அவரது குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த மற்றொரு வீட்டின் கதவை திறந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வீட்டின் பீரோ லாக்கர் சாவி எங்கே என்று அதிகாரிகள் கேட்க, அதற்கு அமைச்சரின் உதவியாளர் சாவி இல்லை என்று பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து, போலி சாவி தயாரிக்கும் நபரை வரவழைத்து, பீரோவையும், லாக்கரையும் திறக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதற்கிடையே சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

டிஜிட்டல் முறையில் உள்ள ஆவணங்களை கண்டறியும் வகையில், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vilupuram Ponmudi house locker Fake key ED Raid


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->