போக்சோ வழக்கில் 3 பேருக்கு சாகும் வரை சிறை!! விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! - Seithipunal
Seithipunal


கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே எம்.சுபாஷ், விக்னேஷ், பி.சுபாஷ் என்ற 3 இளைஞர்கள் 17 வயது சிறுமியை வழிமறித்து துணி வாங்கி வைத்துள்ளதாகவும், அதனை தருவதாகவும் கூறி வலுக்கட்டயமாக இழுத்துச் சென்று ஒரு காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட சிறுநீர் அளித்த புகாரின் பேரில் இந்த கொடூர குற்ற செயலில் ஈடுபட்ட 3 பேரையும் கீழ் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் போக்ஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக போக்சோ வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு சாட்சியங்கள் மீதும் விசாரணை நடைபெற்ற முடிந்த நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். 

அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட எம்.சுபாஷ், விக்னேஷ், பி.சுரேஷ் ஆகியோர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் இவர்கள் மூவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், மூவருக்கும் தலா  ரூ 15,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் அரசு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் மூன்று பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Villupuram court verdict 3people in prison till death in POCSO case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->