சொந்தமாக சேனல் தொடங்கும் விஜய்! திமுக ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்ட திட்டம்? விஜயின் மாஸ்டர் பிளான்!
Vijay to start his own channel Plan to shed light on DMK corruption Vijay master plan
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய், அரசியலிலும் தனது அடித்தளத்தை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் தொடங்கிய “தமிழக வெற்றிக் கழகம் (TVK)” தற்போது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக, கட்சிக்கான தனிப்பட்ட தொலைக்காட்சி சேனல் தொடங்கும் முயற்சி மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.
விஜய் தனது கட்சியின் சிந்தனைகள், அறிவிப்புகள் மற்றும் தேர்தல் பிரசாரங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்க, புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக இரண்டு வழிகள் பரிசீலனையில் உள்ளன:முற்றிலும் புதிய சேனல் தொடங்குவது.ஏற்கனவே செயல்பட்டுவந்த சேனலை வாங்கி அதனை கட்சிக்கான பிரசார மேடையாக மாற்றுவது.
முழுமையாக புதிய சேனல் தொடங்குவதற்கு அரசு அனுமதி பெறுதல், தொழில்நுட்ப வசதிகள் அமைத்தல், பிரபலப்படுத்துதல் போன்ற சவால்கள் இருப்பதால், தற்போது கேப்டன் டிவியை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது சாத்தியமாகாவிட்டால், செயல்படாமல் இருக்கும் ஒரு மியூசிக் சேனலை வாங்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.
விஜய், “தளபதி டிவி” என்ற பெயரில் சேனலை நடத்தத் தீர்மானித்துள்ளதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “விஜய் டிவி” ஏற்கனவே இருப்பதால் அந்தப் பெயரை பயன்படுத்த இயலாத நிலையில், “தளபதி டிவி” என்ற பெயரே இறுதி செய்யப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அடுத்த கட்டமாக, 2026 சட்டசபைத் தேர்தலில் விஜய் நேரடியாக போட்டியிடவுள்ளார். அவர் திருச்சி அல்லது நெல்லை மாவட்டத்தில் இருந்து களமிறங்கலாம் என்ற தகவல்கள் பரவுகின்றன. இந்த இரு தொகுதிகளும் விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்பதால், எளிதில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை கட்சிக்குள் நிலவி வருகிறது.
அதற்காக, விரைவில் அந்தத் தொகுதியில் 3-வது பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு, அங்கிருந்து அதிகாரப்பூர்வ தேர்தல் பணிகள் தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
எம்ஜிஆர் அரசியலில் வெற்றி பெற்றதற்கும், ஜெயலலிதா வலிமையான தலைவராக உயர்ந்ததற்கும், அவர்களுக்கு பின்னால் பல மூத்த மற்றும் அனுபவமிக்க தலைவர்கள் இருந்ததே முக்கிய காரணம். ஆனால், TVK தற்போது விஜய்யைத் தவிர வேறு பெரிய முகங்களை கொண்டிருப்பதில்லை.
கட்சியில் உள்ளவர்கள் பெரும்பாலும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியலுக்குப் புதியவர்கள். திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் வலுவான வேட்பாளர்களுடன் மோதக்கூடிய அரசியல் அனுபவம், நிதி வலிமை, பொது செல்வாக்கு இவர்களிடம் குறைவாக உள்ளது. இதனால், கட்சியின் வேட்பாளர் பட்டியலை உருவாக்கவும், பல பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை நடத்தவும் சவால்கள் நிலவுகின்றன.
இந்நிலையில், கட்சியின் சிந்தனைகளை மக்களிடம் விரைவாகவும் தாக்கமுடனும் கொண்டு சேர்க்க டிவி சேனல்தான் முக்கிய ஆயுதம் என விஜய் கருதுகிறார். இதன் மூலம், தனது அரசியல் நோக்கங்களை, திட்டங்களை, தேர்தல் பிரசாரங்களை மக்களிடம் எளிதாகவும் நேரடியாகவும் பரப்ப முடியும்.
எனவே, “தளபதி டிவி” தொடங்கும் விஜயின் திட்டம், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
English Summary
Vijay to start his own channel Plan to shed light on DMK corruption Vijay master plan