அதிமுக மீது விமர்சனமா?... வேண்டாம்! – தமிழக பா.ஜ.க.வினருக்கு அமித்ஷா கடுமையான அறிவுறுத்தல்
Criticism AIADMK No Amit Shah gives strict instructions Tamil Nadu BJP members
டெல்லியில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆலோசனை கூட்டத்தில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பா.ஜ.க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், வாக்கு திருட்டு குறித்த காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பது எப்படி என்பதையும், தமிழக பா.ஜ.க-வினரிடையே நிலவும் கோஷ்டி பூசலைக் கட்டுப்படுத்துவது பற்றியும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
அமித் ஷா:
அப்போது அமித் ஷா அவர்கள் தெரிவித்ததாவது, “அ.தி.மு.க. குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ, பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது. அதற்கு பதில் உறவை வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தமிழக பா.ஜ.க தலைவர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்தக் கூட்டத்தில் நயினார் நாகேந்திரன், எல். முருகன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இருப்பினும், அழைப்பு விடுக்கப்படாததால் முன்னாள் தலைவர் 'அண்ணாமலை' பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Criticism AIADMK No Amit Shah gives strict instructions Tamil Nadu BJP members