டி.டி.வி. தினகரனின் அரசியல் வருங்காலம் பிரகாசமாக இருக்க வாழ்த்துக்கள்! – திருமாவளவன் - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்தார். இதன் மூலம், முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையடுத்து தொடரும் இந்த விலகல், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், டி.டி.வி. தினகரனின் இந்த திடீர் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,"டி.டி.வி. தினகரனின் முடிவு அவரது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும்.

பா.ஜ.க தலைமையிலான கூட்டணியிலிருந்து ஒவ்வொருவரும் தனியாக வெளியேறுவார்கள் என நம்புகிறேன். திண்டிவனம் நகராட்சியில் நடந்து கொண்டுள்ள வன்கொடுமை சகிக்க முடியாதது.

இதற்குக் காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTV Dhinakaran bright political future whishes Thirumavalavan


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->