குடும்பமே அதிர்ச்சி...! சாதாரண வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் பில் ..!
family shocked Rs 161 crore electricity bill for an ordinary house
நெல்லை மூலைக்கரைப்பட்டி மின்வாரிய உபகோட்டத்திற்குட்பட்ட மருதகுளம் பகுதியை சேர்ந்த தொழிலாளி மாரியப்பன் என்பவர். இவரின் வீட்டிற்கு சில தினங்களுக்கு முன், மின் கணக்கீடு செய்ய வந்த ஊழியர் பணி முடித்து சென்ற பிறகு, மாரியப்பனின் செல்போனுக்கு வந்த மாதாந்திர மின் கட்டணச் செய்தி அவரையும், குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதில் காட்டப்பட்ட தொகையானது, சாதாரண வீட்டு மின்சார பயன்பாட்டுக்கு அல்லாமல் மொத்தம் ரூ.1 கோடி 61 லட்சத்து 31 ஆயிரத்து 281 இருந்தது.இது ஒரு நடுத்தர குடும்பம் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு இவ்வளவு தொகையா?” என்று திகைத்த மாரியப்பன் உடனடியாக மின்வாரிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார்.
இதை உறுதி செய்த மின்வாரிய அதிகாரிகள், “ஆமாம், தவறு நடந்துள்ளது. இது தொழில்நுட்ப கோளாறும், மனித பிழையும் சேர்ந்த காரணம். மதியம் 12 மணிக்குள் சரிசெய்யப்படும்” என்று விளக்கம் கொடுத்தார்.
மேலும், பணியாளர் பற்றாக்குறையால் தற்போது மின் கணக்கீடு பணி அவுட்சோர்சிங் ஊழியர்கள் மூலமே நடைபெறுகிறது. அதில் ஏற்பட்ட தவறுதான் இவ்வளவு பெரிய பில் வந்ததற்குக் காரணம் என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, தற்போது சம்பந்தப்பட்ட மீட்டர் மீண்டும் பரிசோதிக்கப் பட்டு, உண்மையான மின்சாரப் பயன்பாட்டின் அடிப்படையில் சரியான கட்டணம் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
English Summary
family shocked Rs 161 crore electricity bill for an ordinary house