ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு... எவ்வளவு குறைந்தது தெரியுமா..?
Water levels Okenakkal have declined Do you know how much it decreased
கர்நாடக மாநிலத்தில் கனமழை தாக்கத்தல் அங்கிருக்கும் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் நிரம்பி வழிகின்றன.மேலும், கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் மற்றும் நீர்நிலைகளை வேகமாக நிரப்பி வருகிறது.
அதிலும் குறிப்பாக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கே.ஆர்.எஸ். அணையும், கபினி அணையும் முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன.இதில் கபினி அணை மட்டும் 2 முறை முழுக் கொள்ளளவை எட்டியது. இதைத் தொடர்ந்து, நீர்வரத்து காரணமாக, தண்ணீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.

இதனிடையே, தற்போது மழை ஓய்ந்துள்ளதால், நீர்வரத்து மற்றும் தண்ணீர் திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து, கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 14,704 கனஅடி வந்தது.அதில் 14,171 கனஅடி திறக்கப்படுகிறது.
மேலும், கபினி அணைக்கு வினாடிக்கு 9,524 கனஅடி வந்தது.அதில் 9,171 கனஅடி திறக்கப்படுகிறது.இதன் காரணமாக, நேற்று தமிழக காவிரிக்கு வினாடிக்கு 23,342 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 24,000 கனஅடி நீர் பாய்ந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 18,000 கனஅடியாகக் குறைந்து வந்தது.
English Summary
Water levels Okenakkal have declined Do you know how much it decreased