சட்டவிரோத மின்வேலியில் சிக்கி பசுமாடு பலி.. பசுவை தேடி சென்ற தம்பதியும் உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி பசுமாடு, தம்பதிகள் என 3 உயிர் பலியான சோகம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம், புதூர் கிராமத்தை சார்ந்தவர் ஜெயப்ரகாஷ் (வயது 34). இவரது மனைவி அஸ்வினி (வயது 26). இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்து ஒரு வருடம் மட்டுமே ஆகிறது. 

இந்நிலையில், இவர்கள் பசுமாடுகளை வளர்த்து வரும் நிலையில், மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு வீட்டிற்கு வராததால், தம்பதிகள் இருவரும் இரவு மாட்டினை தேடி சென்றுள்ளனர். பசுவை தேடி சென்ற இரண்டு பேரும் காலை வரை வீட்டிற்கு திரும்பவில்லை. 

இதனால் உறவினர்கள் அவர்களை தேடி சென்ற நிலையில், இருவரும் பசுமாட்டுக்கு அருகே விஜயகுமார் என்பவரின் நிலத்தில் உயிரிழந்து இருந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் திருவலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரின் உடலையும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், மின்வேலியில் சிக்கி பசுமாடு, தம்பதிகள் 2 பேர் உயிரிழந்தது அம்பலமானது. இதனையடுத்து, தம்பதிகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

மேலும், பன்றிக்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி முதலில் பசுவும், பின்னர் அதனை தேடிவந்த தம்பதிகளும் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நிலத்தின் உரிமையாளரான விஜயகுமாரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Thiruvalam Couple and Cow Died Electric Attack Police Investigation 5 Oct 2021


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal