வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்! பெண்ணின் காது, கழுத்து அறுத்து கொள்ளை!
Vedaranyam near woman jewelry robbery
நாகப்பட்டினம்: வேதாரண்யம் அடுத்துள்ள பூவதேவன்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி வனிதா குமாரி (வயது 49). கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, பாண்டியன் திருவாரூரில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் வனிதாகுமாரி இன்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டை திறந்து வைத்து சமையல் வேலை செய்து கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வனிதா குமாரியின் கழுத்தில் இருந்த நகையை கேட்டுள்ளனர்.

அதற்கு வனிதா குமாரி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கையில் இருந்த கத்தியால் வனிதா குமாரியின் கழுத்து மற்றும் காது பகுதியை அறுத்து பின்னர் அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த வனிதா குமாரி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து வனிதா குமாரியை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
English Summary
Vedaranyam near woman jewelry robbery