வள்ளலார் கோவில் பெருவெளியில் சர்வதேச மையம் - மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தடை! - Seithipunal
Seithipunal


வடலூர் வள்ளலார் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில், கட்டுமானங்களை மேற்கொள்ளலாம் என்று, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் வடலூர் வள்ளலார் கோவிலின் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, வள்ளலார் பெருவெளியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில், வருகின்ற அக்டோபர் இரண்டாவது வாரத்திற்குப் பின்பு கட்டுமான பணிகளை தொடரலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

மேலும், முதியோர் இல்லம், சித்தா மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு இந்து சமய அறநிலைத்துறைக்கு அனுமதி வழங்கியும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து இருந்தது.

ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வசதி செய்து வேண்டியது தமிழக அரசின் கடமை என்றும், சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகளை ஒத்திவைத்தும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vadalur vallalar temple place hospital permission High court High court oct


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->