ஆந்திராவை பதறவைத்த அதே சம்பவம் தமிழகத்திலும்..! துடிதுடித்து பலியான இளைஞர்! - Seithipunal
Seithipunal


நேற்று ஆந்திர மாநிலத்தில் சாக்கு முட்டையில் வெடிகளை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றபோது, குழியில் விழுந்து விபத்துக்குள்ளான போது, சாக்கு முட்டையில் இருந்த வெடிகள் வெடித்து, ஒருவர் பேர் பலியாகினர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்திலும் தற்போது அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகே இறையூர் பகுதியில் தான் இந்த சம்பவம் அரங்கேரி உள்ளது.

இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளை எடுத்துச் சென்ற இளைஞர் தற்போது உயிரிழந்துள்ளார். 

இருசக்கர வாகனத்தில் இருந்த பட்டாசுகள் மீது பறந்து வந்து விழுந்த ஒரு பட்டாசு வெடித்ததில் இந்த வெடி விபத்து ஏற்பட்டு இளைஞர் உயிரிழந்து உள்ளதாக தெரியவந்துள்ளது. 

இறையூர் கிராமத்தை சேர்ந்த டேவிட் வில்சன் என்ற 22 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் இந்த பட்டாசு விபத்து குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

UlundurPettei Crackers Accident same as andhra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->