அமைச்சர் பங்கேற்ற பள்ளி "கல்லித்துறை" நிகழ்ச்சி.!! அரசு விழாவில் அரங்கேறிய கூத்து.!!
Typographical error in govt festival banner create controversy
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மேடையில் வைக்கப்பட்டிருந்த பேனரில் "பள்ளி கல்வித்துறை" என்பதற்கு பதிலாக "பள்ளி கல்லித்துறை" என பிழையுடன் எழுதப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு மேடையில் எழுத்துப் பிழை கூட இருப்பது கவனிக்காமல் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து அங்கிருந்த சிலர் எழுத்து பிழை உள்ளதை சுட்டிக்காட்டிய பிறகு அரசு விழா மேடையில் இருந்து பேனர் அகற்றப்பட்டது. மாணவர்களின் கல்வி அறிவை வளர்க்கும் பள்ளி கல்வித்துறையின் கீழ் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் பிழையுடன் எழுதப்பட்டிருந்ததற்கு பல்வேறு சமூக ஆர்வலர்களும் தமிழறிஞர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Typographical error in govt festival banner create controversy