திருவள்ளூரில் அடுத்தடுத்து இரு இளம் பெண்கள் மாயம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!
Two young women were missing consecutively in Tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த மணவாள நகர் புதுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரின் மகள் ராஜமதி. இவர் தண்டலம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தந்தை தனசேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த நுங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன் மகள் ஐஸ்வர்யா. இவர் பிளஸ் 2 படித்து முடித்து வீட்டில் இருந்த நிலையில் கடந்த 7ம் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தந்தை பத்மநாபன் மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Two young women were missing consecutively in Tiruvallur