பரிகாரம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் கைவரிசையைக் காட்டிய போலி சாமியார்கள் - திருநெல்வேலியில் பரபரப்பு.!
two peoples jewel fraud to old woman in tirunelveli police investigation
பரிகாரம் செய்வதாக கூறி மூதாட்டியிடம் கைவரிசையைக் காட்டிய போலி சாமியார்கள் - திருநெல்வேலியில் பரபரப்பு.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழபாட்டம் ஜெயன்நகரைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி சண்முகத்தாய். வயோதிகத்தின் காரணமாக நடப்பதற்கு சிரமமப்பட்டு வந்த இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் தங்களை கைரேகை ஜோதிட நிபுணர்கள் என்று சண்முகத்தாயிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.
அதனை உண்மை என்று நம்பிய சண்முகத்தாய் ரேகை பார்பதற்காகத் தன் கையை நீட்டினார். இதைப்பார்த்த இருவரும், உங்களுக்கு யாரோ ஒருவர் செய்வினை வைத்துள்ளார். அதனால் தான் உங்களால் நடக்க முடியவில்லை.

உங்களுக்கு தோஷம் உள்ளது. பரிகாரம் செய்தால் மட்டும் போதும். அதற்கு உப்பும், அதில் எழுதுவதற்கு வீட்டில் இருந்து நகையும் கொண்டு வருமாறுத் தெரிவித்துள்ளனர். அதன் படி சன்முகத் தாயும் உப்பு மற்றும் நகையை எடுத்து வந்து கொடுத்துள்ளார்.
இந்த இரண்டையும் வாங்கிக்கொண்ட இருவரும், இதை அருகில் உள்ள கோயிலில் வைத்தும் பூஜை செய்ய வேண்டும். அந்த பூஜை யாருக்காக செய்யப்படுகின்றதோ, அவர்கள் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்றுத் தெரிவித்துவிட்டுச் சென்றனர்.
ஆனால் அதன் பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வரவே இல்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சண்முகத்தாய் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடிவருகின்றனர்.
English Summary
two peoples jewel fraud to old woman in tirunelveli police investigation