திருப்பத்தூர் : ரயிலை கவிழ்க்க சதியா? ரயில் சிக்னல் பெட்டி அடித்து உடைக்கப்பட்ட சம்பவம்!
Tripattur Train signal box damage
திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில் சிக்னல் பெட்டி சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலுக்கு சிக்னல் கொடுக்கக்கூடிய விளக்குகளில் திடீரென அதிர்வு ஏற்பட்டதால், சிக்னல் பெட்டி இருந்த இடத்திற்கு ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த ரயில் சிக்னல் பெட்டி சேதப்படுத்தப்பட்டு இருந்ததை உறுதி செய்தனர். சிக்னல் பெட்டி அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸ் கொண்டதில், அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரியவந்தது.

இதனை அடுத்து ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, சேலம் ரயில்வே கோட்ட ஆணையர் சவுரவ், திருப்பத்தூர் ரயில் நிலையத்திற்கு நேரடியாக வந்து, சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஒடிசாவில் சிக்னல், எலெக்ட்ரானிக் இன்டெர்லாக் கோளாறு காரணமாக மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், திருப்பத்தூரில் இப்படி ஒரு பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேலும், அண்மையில் திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் டயர்களை போட்டு ரயிலை தவிர்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதா என்பது குறித்தும் ஒரு பக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tripattur Train signal box damage