400க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்: வங்கி அதிகாரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை மஸ்தான் தெருப்பகுதியை சார்ந்தவன் எடுத்த ஜெயக்குமார் (வயது 36). இவன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகேயுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறான். இவனிற்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளபெரம்பூர் பகுதியை சார்ந்த தாட்சகர் (வயது 32) என்பவருக்கும் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னதாக அங்குள்ள தேவாலயத்தில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பாக வரதட்சணை வழங்கப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் மணப்பாறையில் வைத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், புதுமண தம்பதிகளாக இருவந்தாலும் கணவனின் மீது மனைவிக்கு வெறுப்பு மற்றும் விரக்தி இருந்து வந்துள்ளது. மேலும், மனைவியுடன் நெருங்கி பழகுவதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தது தாட்சகருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தன்னிடம் ஏதும் குறைகள் உள்ளதா? என்று வெளிப்படையாக மனைவி கேட்டும், அவரிடம் எரிந்து விழுவதை எட்வின் ஜெயக்குமார் வழக்கமாக வைத்துள்ளான். இந்த நிலையில், இரவு பொழுதுகளில் நீண்ட நேரம் அலைபேசியை உபயோகம் செய்து கொண்டு இருந்த நிலையில், தனக்கு 50 பவுன் நகை மேலும் வரதட்சணையாக வேண்டும் என்று வலிறுத்தியுள்ளான்.

நமது இல்லற வாழ்க்கைக்கு கூடுதல் வரதட்சணை பிரச்சனை இல்லை என்பதை தெளிவாக உணர்ந்துகொண்ட தாட்சகர், கணவருக்கு தெரியாமல் அவரது அலைபேசியை பார்த்துள்ளார். இந்த நேரத்தில் பெரும் அதிர்ச்சியாக அருவருக்கத்தக்க வகையில் உள்ள ஆபாச காணொளி காட்சிகள் அலைபேசியில் நிறைந்து இருந்துள்ளது. மேலும், பல பெண்களுடைய வங்கிக்கணக்கு விபரமும் இருந்துள்ளது. மேலும், வங்கிக்கு வருகை தரும் பெண் வாடிக்கையாளர்கள், அக்கம் பக்கத்து வீட்டில் வசித்து வரும் பெண்கள் என அவர்களின் அங்க அசைவுகள் தொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. 

இதன்பின்னர் இது தொடர்பாக கணவரின் தாயார் லில்லிஹைடா, கணவரின் தங்கை நிர்மலா மேரி மற்றும் உறவினரின் பெண் ரீட்டா ஆகியோரிடம் தெரிவித்தும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருந்த நிலையில், லில்லிஹைடா மற்றும் ரீட்டாவுக்கு இடையே ஓரினசேர்க்கை பழக்கமும் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பான செயல்களுக்கு கணவனுடன் வங்கியில் பணியாற்றி வரும் தேவி பிலோமீனா என்பவளும் உடந்தையாக இருந்துள்ளாள். இவர் கடந்த மூன்று வருடமாக லோன் வழங்கும் பிரிவில் பணியாற்றி வருகிறார். இதனால் எப்போதாவது வங்கிக்கு வருகை தந்து வந்துள்ளார். 

மேலும், பல்வேறு வகைகளில் கடன் வாங்க வரும் பெண்களை, பிலோமினா மூளைச்சலவை செய்து உல்லாசத்திற்கு உட்படுத்தி, இதனை காணொளி காட்சிகளாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். இது தொடர்பான விஷயத்தை மனைவி அறிந்துகொண்டதை அடுத்து, எட்வின் ஜெயக்குமார் மனைவியை கொலை செய்ய மிரட்டல் விடுத்த நிலையில், கொலை முயற்சியும் செய்யப்பட்டுள்ளது. தனது மனைவி காவல்துறையினருக்கு இது தொடர்பான விஷயத்தை தெரிவித்து புகார் அளித்தால் கைதாகவேண்டும் என்று எண்ணத்தில், மதுரை நீதிமன்றத்தில் முன் ஜாமீனும் பெறப்பட்டுள்ளது. 

காமுகன் எட்வின் ஜெயக்குமார் சுமார் 15 அலைபேசிகளை பயன்படுத்தி வந்த நிலையில், கணவருக்கு தெரியாமல் மனைவி இரண்டு அலைபேசியை மட்டும் சோதனை செய்ததில் சும்மர் 200 ஆபாச வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது. பிற அலைபேசியில் இருக்கும் அனைத்தையும் எட்வின் அவசர அவசரமாக அளித்துள்ள நிலையில், இதனை பறிமுதல் செய்து ஆதாரத்துடன் தாட்சர் மதுரை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் அடிப்படையிலேயே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஜெயக்குமார், அவரது தாய் மற்றும் சகோதரி, உறவுக்கார பெண், வங்கியில் பணியாற்றும் பிலோமினால் ஆகியோரை தேடி வருகின்றனர்.

கணவனின் மற்றொரு முகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள எட்வின் ஜெயக்குமாரின் மனைவி இது தொடர்பாக தெரிவித்த சமயத்தில், திருமணம் முடிந்த சில நாட்களுக்கு உள்ளாகவே, எனது கணவரின் மீது சந்தேகம் ஏற்பட்டது. என்னோடு நெருங்கி பழகாமல் இருந்த காமுகன். பல பெண்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளான். மேலும், நான் கைப்பற்றிய இரண்டு அலைபேசியில் மட்டுமே சுமார் 200 ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இருந்துள்ளது. இந்த 200 வீடியோ காட்சியில் பெண்ணொருவர் இறந்து இருப்பது போலவும் காட்சிகள் பதிவாகியிருந்தது. பெண் இறந்த சடலத்திற்கு அருகில் எனது கணவனும் இருந்துள்ளான். விராலிமலை பகுதியை சார்ந்த புவனா என்ற பெண்மணி கணவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்துள்ளார். 

இதன்மூலமாக புவனா கர்ப்பமாகவே, இதனை எனது கணவரிடம் கூறிய நேரத்தில் கர்ப்பத்தை கலைக்க எட்வின் வற்புறுத்தியுள்ளான். இதன் பின்னர் புவனாவை எட்வின் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். இது தொடர்பான அனைத்தையும் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஆதாரத்துடன் கூறியும், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். எட்வின் பணியாற்றி வந்த வங்கி அலுவலகத்திற்கு சென்று விசாரணை செய்த நேரத்தில், வங்கி அதிகாரிகள் தங்களுக்கு இது தொடர்பான தகவல் இப்போது தான் தெரியவந்தது. இவரை வங்கி நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்து அறிவித்துள்ளதாக கூறினார். இதனைப்போன்று கணவரின் மணப்பாறை இல்லமும் பூட்டிக்கிடந்துள்ளது.

பின்னர் இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட நேரத்தில், எட்வினின் மனைவி சென்னையில் வசித்து வருகிறார்.. அவரை காண எட்வின் சென்னைக்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நான் அவரது மனைவி நான் தான் என்று கூறினேன். மேலும், அக்கம் பக்கத்தில் வசிக்கும் நபர்களிடம் தனது கணவரின் காமுகத்தை தெரியப்படுத்தினேன். இதனால் அதிர்ச்சியடைந்த அனைவரும் உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், இந்த வீட்டிற்கு ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தினமும் வந்து செல்வதாக தெரிவித்துள்ளனர் என்று கண்ணீர் மல்க தாட்சகர் தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய விஷயம் தொடர்பாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பான புகார் மனுவை காவல்துறையினர் ஏற்றனர். இந்த புகாரின் அடிப்படையில் கணவர் ஜெயக்குமார், அவரது தாயார், சித்தி, தாயாரின் தோழி, ஜெயக்குமாரின் பணியாற்றிவந்த வங்கி ஊழியரான தேவி பிலோமினா உள்ளிட்ட 5 பேர் மீது வல்லம் காவல் துறையினர் கடந்த 7ஆம் தேதி வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். 

இதில் எட்வின் ஜெயக்குமார் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு வரதட்சணை மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்து வந்தது, காவல்துறையினர் தேடுவதை அறிந்த 5 பேரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர். தற்போது இது தொடர்பான வழக்கு மணப்பாறை மகளிர் காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பான உத்தரவை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேற்று பிறப்பித்தார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை திருச்சி காவல்துறையினரும் மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணைக்கு அவ்வபோது தஞ்சாவூரில் இருந்து திருச்சி வந்து சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும், இவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தாட்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy bank officer abusing women case


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal