திருச்சி || கட்டுப்பாட்டை இழந்த லாரி.! விமான நிலைய சுற்று சுவர் மீது மோதி விபத்து.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர்  அம்மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியிலிருந்து லாரியில் காய்கறி லோடு ஏற்றி  வந்து கொண்டிருந்தார். 

இந்நிலையில் திருச்சி விமான நிலையம் அருகே வந்த கொண்டிருந்த போது அவருக்கு முன்னே சென்று கொண்டிருந்த லாரியை முந்துவதற்கு  முயன்றுள்ளார். அப்போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, திருச்சி விமான நிலையத்தில் உள்ள சுற்றுச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் சுற்றுச் சுவர் இடிந்து அருகே இருந்த சிக்னல் மீது மோதியதில் அதன் கருவிகள் அனைத்தும் சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து உடனடியாக ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 

அந்த தகவலின் பேரில் ஏர்போர்ட் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, ஏர்போர்ட் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிக்னலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து விபத்து குறித்து லாரி டிரைவரிடம் ஏர்போர்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விபத்து ஏர்போர்ட் பகுதியில் ஏற்பட்டதன் காரணமாக சிலமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

trichy airport compound wall broke for lorry lost control


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->