#BigBreaking: தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முருகானந்தம் ஐஏஎஸ்!

தற்போது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முருகானந்தம் ஐஏஎஸ் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.

நிதித்துறை செயலாளராக இருந்த முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்துவந்தார்.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தொழில் துறை முதன்மைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பு வகித்துள்ளார்.

ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற முருகானந்தம், 1991 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்தவர்.

"சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ்"

ராஜஸ்தானைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா, கடந்தாண்டு ஜூன் மாதம் தமிழக தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் வரை உள்ள நிலையில், தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார். 

காஞ்சிபுரம் துணை ஆட்சியராக கடந்த 1989 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கிய சிவ்தாஸ் மீனா, 2017-ல் மத்திய அரசுப் பணி, நகராட்சி நிர்வாகத் துறை செயலர், தலைமைச் செயலர் பணிகளை செய்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Transfer Chief Secretary Muruganantham IAS


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->