மந்திர பொம்மை வைத்து, 59 கிலோ தங்கம், பல லட்சம் பணம் கொள்ளை; கர்நாடகாவில் கனரா வங்கியில் மர்மநபர்கள் கைவரிசை..!
Mysterious thieves loot 59 kg of gold and several lakhs of rupees from Canara Bank in Karnataka
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கனரா வங்கிக் கிளையி ஒன்று உள்ளது. அங்கு அடகு வைக்கப்பட்ட 59 கிலோ தங்கம் மற்றும் ரூ.5.2 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த மே 25-ஆம் தேதி பசவன காகேவாடி தாலுகாவில் அமைந்துள்ள மனகுலி நகரில் உள்ள கனரா வங்கி கிளையில் நடந்துள்ளது.
கொள்ளை தொடர்பாக மறுநாள் அந்த வங்கியின் மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த மே 24-ஆம் தேதி, நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கி விடுமுறை. இதனால் வாங்கி முழுவதும் மூடப்பட்டிருந்துள்ளது. அடுத்த நாள் காலை பகுதி நேர துப்புரவு பணியாளர் சுத்தம் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

உடனடியாக மேலாரே வங்கிக்கு வந்து பார்த்த போது கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் தங்கக் கடன்களுக்காக அடகு வைத்த வாடிக்கையாளர்களுடையது எனவும், மதிப்பீட்டளவில் 59 கிலோ தங்கம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் வங்கியின் அலாரத்தை செயலிழக்க வைத்து, போலி சாவியைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், விசாரணையைத் திசை திருப்பவும் வகையில் விசாரணைக்கு வரும் போலீசாரை அச்சுறுத்தவும் ஒரு கருப்பு மந்திர பொம்மை சம்பவ இடத்தில் வைத்து சென்றுள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையின் படி, இரண்டு நாட்கள் வங்கியைக் கண்காணித்த பிறகே கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்துள்ளதாகவும், வங்கியின் உள் அமைப்பு குறித்து முன்பே கொள்ளையர்கள் தெரிந்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, மந்திர பொம்மை வைத்தது புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்தவும், வழக்கின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தவும் வேண்டுமென்றே செய்யப்பட்ட செயல் என தோன்றுகிரக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறதாகவும், வழக்கை விசாரிக்க 08 குழுக்களை அமைத்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் விஜயபுரா எஸ்.பி., லக்ஷ்மன் நிம்பர்கி கூறியுள்ளார்.
English Summary
Mysterious thieves loot 59 kg of gold and several lakhs of rupees from Canara Bank in Karnataka