போனில் பேச மறுத்த சோகம்...! காதலியின் நிராகரிப்பால் தூக்கிட்டுக் கொண்ட தனியார் மருத்துவமனை ஊழியர்...!
tragedy refusing talk phone private hospital employee hanged himself due his girlfriend rejection
காதலி தன்னுடன் பேச மறுத்ததால் மனமுடைந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் வீட்டின் அருகே உள்ள பழைய வீட்டில் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் திருவட்டார் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த தச்சூர் குன்றுவிளை பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் விஷ்ணு நந்தன் (23).

இவர் சுங்கான்கடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்பப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.விஷ்ணு நந்தன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது காதலியுடன் பேசுவதற்காக அவர் தொலைபேசியில் அழைத்துள்ளார்.ஆனால், அந்தப் பெண் பேச விருப்பமில்லை என்று தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த விஷ்ணு நந்தன், நடந்த சம்பவம் குறித்து தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார்.பின்னர் இரவு வீட்டின் அருகே இருந்த பழைய வீட்டில் சென்று தூங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று காலையில் விஷ்ணு நந்தனை பார்ப்பதற்காக அவரது தாய் அங்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவர், ஜன்னல் வழியாக பார்த்துள்ளார்.அப்போது அறைக்குள் விஷ்ணு நந்தன் தூக்கில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவட்டார் காவலர்கள் உடனடியாக அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் விஷ்ணு நந்தனின் உடலை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக திருவட்டார் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
tragedy refusing talk phone private hospital employee hanged himself due his girlfriend rejection