இளைஞர்களே ரெடியா.. ஆவடியில் நாளை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


சென்னை ஆவடியில் நாளை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை பட்டாபிராம் டிஆர்பிசிசி இந்து கல்லூரியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 மேற்பட்ட காலில் பணியிடங்களை நிரப்ப உள்ளனர். மேலும் இந்த வேலைவாய்ப்பில் கலந்து கொள்ள கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow mega employment camp in Chennai Aavadi


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->