விழுப்புரம் இளைஞர்களே தயாரா... நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்...! மிஸ் பண்ணிடாதீங்க...! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

•விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியா ர்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன.

•அந்த வகையில், இந்த மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. 

•இவ்வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட வேலையளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களை நிரப்ப உள்ளார்கள்.

கல்வி தகுதி:

•8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை

•ஐ.டி.ஐ., 

•டிப்ளமோ, 

•பி.இ., பி.டெக், நர்சிங், பார்மசி போன்ற கல்வித் தகுதியுடைய வேலைதேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.

•இம்முகாமில் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடு நர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

•மேலும் தனியார்துறையில் பணி வாய்ப்பினை பெறவிரும்பும் பொது மற்றும் மாற்றுத்திறனாளி மனுதாரர்கள் தங்களின் அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புகளுடன் பங்கேற்று பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow June 16th employment camp in Villupuram


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->