இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் முதல் முறை தலைமை அலுவலகம் செல்கிறார் - எடப்பாடி பழனிசாமி..! - Seithipunal
Seithipunal


நாளை அதிமுகவின் தலைமை அலுவகலத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகைதருவார் என அக்கட்சி சார்ப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்படுள்ளதாவது,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் , தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் , 8.9.2022 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில் , தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . மாளிகைக்கு வருகை தந்து , தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் , இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து , மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார் . 

இந்த நிகழ்ச்சியில் , தலைமைக் கழகச் செயலாளர்கள் , மாவட்டக் கழகச் செயலாளர்கள் , கழக நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அமைச்சர்கள் , முன்னாள் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் , கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் , கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tomorrow EPS Going to the Head office of AiADMK


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->