செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் நாளை தீர்ப்பு.!! - Seithipunal
Seithipunal


சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 13ம் தேதி கைது செய்யப்பட்ட பொழுது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் பைபாஸ் சர்ஜரி சிகிச்சை தேவைப்பட்டதால் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படது.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டு முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜி சட்ட விரோத நீதிமன்ற காவலில் இருப்பதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிடக்கோரியும் அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.

கடந்த ஜூன் 22ஆம் தேதி இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிஷாபானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்த போது "என் கணவரை சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரின் கைதுக்கான காரணத்தை சொல்லவில்லை' என்றும் வாதிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் வழக்கறிஞரும் திமுக எம்.பியுமான என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதங்களை முன் வைத்தார். அதே போன்று அமலாக்கத்துறை தரப்பில் துஷார் மேத்தா காணொலி வாயிலாக ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.

இந்த வழக்கின் வாதங்கள் கடந்த வாரம் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. நாளை காலை 10:30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிஷாபானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது தீர்ப்பு வழங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tomarrow hearing of senthil balaji case in chennai high court


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->