இன்று வெளியாகப்போகும் தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல்.! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

அதுமட்டுமல்லாமல் பணம் இருந்தால்தான் த.வெ.க.வில் பதவி தரப்படுவதாக தொண்டர்கள், நிர்வாகிகள் பேசக்கூடிய ஆடியோக்கள் த.வெ.க. வாட்ஸாப் குழுக்களில் பகிரப்பட்டு வந்தது.

இது தொடர்பாக பனையூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளுக்கு பணம் கொடுத்தாலும், பணம் வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாவட்ட செயலாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக தலைவர் விஜய் இன்று பனையூரில், மாவட்ட பொறுப்பாளர்களை விஜய் சந்திக்க உள்ளார். அதன்பின்பு பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

ஒரு சில மாவட்டங்களில் மட்டும் இன்னும் மாவட்ட செயலாளர் யார்? என்பது முடிவாகவில்லை. ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்களின் பட்டியல் இன்று வெளியாகும் என்றுத் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today released tvk districts secretary list


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->