தங்கம் விலை தொடர் சரிவு: கிராமுக்கு ₹40 குறைந்து ₹11,460-க்கு விற்பனை!
today gold rate 21 11 2025
சென்னை: தங்கத்தின் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக இன்று (நவம்பர் 21, வெள்ளி) இரண்டாவது நாளாக விலை குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.11,600-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.92,800-க்கும் விற்பனையானது. நேற்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.100 மற்றும் சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று விலை நிலவரம்:
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து, இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,460-க்கு விற்பனையாகிறது. அதேபோல, ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து ரூ.91,680-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையிலும் குறைவு
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளிக்கு ரூ.4 குறைந்து, இன்று ரூ.169-க்கு விற்கப்படுகிறது. கிலோ பார் வெள்ளிக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,69,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
today gold rate 21 11 2025